மிசௌரி ஆறு

மிசௌரி ஆறு, அல்லது மிசூரி ஆறு (Missouri River) வட அமெரிக்காவின் நீளமான ஆறாகும்.[10] இது மேற்கு மொன்ட்டானாவின்ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 1,341 மைல் (3,757 கிமீ)[11] பயணித்து செயிண்ட் லூயிசு நகருக்கு வடக்கில் மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதி பத்து அமெரிக்க மாநிலங்களிலும் இரு கனடிய மாகாணங்களிலும் உள்ளது. கீழ் மிசிசிப்பி ஆற்றுடன் இணைத்து கணக்கிட்டால் இது உலகின் நான்காவது நீளமான ஆறாகும். 12,000 ஆண்டுகளாக மக்கள் மிசௌரியையும் அதன் துணையாறுகளையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க முதற்குடிமக்கள் இதன் கரையோரங்களில் வசித்தார்கள், பெரும்பாலானவர்கள் நாடோடி வாழ்க்கை முறையைக் கடைபிடித்தனர். அவர்கள் அமெரிக்கக் காட்டெருதையே உணவுக்கு சாரந்திருந்தார்கள். இவ்வாற்றைப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஐரோப்பியர்கள் கண்டறிந்தனர். இவ்வாற்று பகுதிகள் எசுப்பானியர்களிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் மாறி மாறி இருந்து, இறுதியில் லூசியானா வாங்கல் மூலம் அமெரிக்காவிடம் வந்தது. மிசௌரி ஆறு அத்திலாந்திக்கு பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் வடமேற்குப் பெருவழி என்று கருதப்பட்டது. லூயிசும் கிளார்க்கும் முதன் முறையாக இவ்வாற்றின் நெடுக்க பயணப்பட்டு இது பெருவழி அல்ல என்று நிருபித்தார்கள்.

இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மிசூரி ஆறு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

மிசௌரி ஆறு
பெகிடான்னுய்[1],பிக் மட்டிy[2],வலிமையான மோ,அகல மிசௌரி,கிக்பாருகிசுடி[3],லகோடா மொழியில் மினிசுசே[4][5]
River
மிசௌரி மாநிலத்தின் ரோச்சிபோர்ட் அருகேயுள்ள குறிபிடத்தகுந்தளவு வளர்ச்சியடையாத மிசௌரி ஆறு
பெயர் மூலம்: மிசௌரி பழங்குடியின் மொழியில் மிசௌரி என்றால் மரக்கட்டை கனோ உள்ள மக்கள் என்பதாகும்.[1]
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள் மொன்ட்டானா,வடக்கு டகோட்டா,தெற்கு டகோட்டா,நெப்ராஸ்கா,அயோவா,கேன்சஸ்,மிசூரி
கிளையாறுகள்
  இடம் செப்பர்சன் ,டியர்பார்ன்,சன்,மரியாசு ஆறு,மில்க் ஆறு,இச்சேம்சு ஆறு (டகோடா)),பெரும் சியோக்சு ஆறு,கிராண்ட் ஆறு,சாரிடன் ஆறு
  வலம் மேடிசன் ,கல்லாடின் ,மஞ்சப்பாறை,சிறு மிசௌரி ஆறு,செயேன்னே ஆறு,வொய்ட் ஆறு,நயோபிராரா ஆறு,பிளாட்டே ஆறு,கேன்சசு ஆறு,ஓசேச்சு ஆறு,காசுகோனேடு ஆறு
நகரங்கள் கிரேட் பால்சு (மாண்ட்டானா),பிசுமார்க், வட டகோட்டா,Pierre, SD,சியோக்சு நகரம், அயோவா,ஒமாகா,கேன்சசு நகரம் (கேன்சசு),கேன்சசு நகரம் (மிசூரி),செயின்ட் லூயிஸ் (மிசூரி)
Primary source செப்பர்சன் ஆற்றில் இணையும் எல் ரோரிங் ஓடை
  அமைவிடம் பிரவுசர் இசுபிரிங் அருகே, மொன்ட்டானா
  உயர்வு 9,100 அடி (2,774 மீ)
Secondary source மாடிசன் ஆற்றின் துணை ஆறான பையர்கோல் ஆறு
  location மாடிசன் ஏரி, யெல்லோ இசுடோன் தேசியப் பூங்கா, வயோமிங்
  உயர்வு 8,215 அடி (2,504 மீ)
Source confluence மிசௌரி எட்வாட்டர் மாநில பூங்கா
  location திரி போர்க்சு, மொன்ட்டானா, மொன்ட்டானா
  உயர்வு 4,042 அடி (1,232 மீ)
கழிமுகம் மிசிசிப்பி ஆறு
  அமைவிடம் செயிண்ட் லூயிசு பக்கத்திலுள்ள எசுப்பானியா ஏரி, மிசௌரி
  elevation 404 அடி (123 மீ) [1]
நீளம் 2,341 மைல் (3,767 கிமீ) [6]
வடிநிலம் 5,29,350 ச.மைல் (13,71,010 கிமீ²) [7]
Discharge for எருமன், மாண்ட்டானா ; RM 97.9 (RKM 157.6)
  சராசரி [8]
  மிகக் கூடிய [9]
  மிகக் குறைந்த [8]
Map of the Missouri River and its tributaries in
North America
Map of the Missouri River and its tributaries in
North America

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கு நோக்கி விரிவடைந்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இவ்வாறே முதன்மையான வழியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விலங்குகளின் கம்பளி வணிகம் அதிகமானதைத் தொடர்ந்து கம்பளிக்காக விலங்குகளைப் பிடிப்பவர்கள் இவ்வாற்றுப் பகுதியை ஆராய்வதற்கான முதற்கட்டப் பணிகளை செய்ததுடன் காட்டுத் தடங்களையும் ஏற்படுத்தினர். 1830 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்ட வண்டி மூலம் இவ்வாற்றுப் பகுதிகளில் முதலில் ஐரோப்பியர்கள் குடியேறினர். நீராவிப் படகுகள் பின் குடியேற்றத்துக்கும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டன. ஆற்றங்கரைகளில் இருந்த அமெரிக்க முதற்குடிமக்களின் நிலத்தை ஐரோப்பியக் குடியேறிகள் பறித்துக்கொண்டதால் அமெரிக்க முதற்குடிமக்களும் குடியேறிகளுக்கும் இடையே கடுமையான நீண்டகாலப் போர் தொடங்கியது. அமெரிக்க வரலாற்றில் இப்போரே நெடிய போராகும்.

இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் இவ்வாற்றுப் படுகை வேளாண்மை வெள்ளக் கட்டுப்பாடு அணைகள் மூலம் நீர் மின்சாரம் என பெரும் வளர்ச்சி கண்டது. இந்த ஆறில் பதினைந்து அணைகளும் துணையாறுகளில் நூற்றுக்கணக்கான அணைகளும் கட்டப்பட்டுள்ளன. நீர்வழிப் பயணத்திற்காக வளைந்து நெழிந்து ஓடும் ஆறு பல மைல்களுக்கு நேராக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஆற்றின் நீளம் ஏறக்குறைய 200 மைல் (320 கிமீ) குறைந்தது. கீழ் மிசௌரி ஆற்றுப் பகுதி தற்போது மக்கள் தொகை மிகுந்ததாகவும் அதிக விவசாய உற்பத்தி கொண்டாதகவும் மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதியாகவும் விளங்குகிறது. அதீத வளர்ச்சியால் மீன்கள் எண்ணிக்கையுடன் காட்டுயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரின் தரத்தையும் அதீத வளர்ச்சி பாதித்துள்ளது.

. . . மிசௌரி ஆறு . . .

வயோமிங் மாண்டேனா மாநிலங்களில் தோன்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்திலிருந்து மிசௌரி ஆறு துவங்குகிறது.

பிரவுசர் இசுபிரிங் என்னுமிடத்தில் செப்பர்சன் முகட்டுக்கு தென்கிழக்கு சரிவில் தோன்றும் ஓடை மேற்காகவும் பின் வடக்காவும் பாய்ந்து ரெட் ராக் ஆறாக மாறுகிறது. வடகிழக்காக திரும்பி பீவர்கெட் ஆறாக என மாற்றம் பெற்று பின் இறுதியாக பிக் ஓல் ஆற்றுடன் இணைந்து செப்பர்சன் ஆறாக மாறுகிறது. மஞ்சப்பாறை தேசிய பூங்காவிலுள்ள மேடிசன் ஏரிக்கருகே பையர்கோல் ஆறு கிப்பான் ஆற்றுடன் இணைந்து மேடிசன் ஆறாகிறது. கல்லாடின் ஏரிக்கருகே தோன்றுவது கல்லாடின் ஆறு ஆகும். மிசௌரி தலைப்பகுதி மாநில பூங்கா அருகேயுள்ள இத்ரி போர்க் நகருகே செப்பர்சன் ஆறும் மேடிசன் ஆறும் இணைந்து மிசௌரி ஆற்றை அதிகாரபூர்வமாக தோற்றுவிக்கின்றன. அங்கிருந்து 1.6 மைல் தொலைவில் கல்லாடின் ஆறு இணைகிறது.

மிசௌரி பின் பிக் பெல்ட் மலைத்தொடரின் மேற்கேயுள்ள கேன்யன் பெர்ரி ஏரியை கடந்து செல்கிறது. பின் வடகிழக்காக கிராட் பால்சு நகருக்கு அருகில் பாய்ந்து ஐந்து அருவிகளை உண்டாக்குகிறது. பின் கிழக்கு முகமாக திரும்பி இயற்கை அழகுமிக்க மிசௌரி இடைவெளி எனப்படும் பள்ளத்தாக்குகள் வழி ஓடி மேற்கிலிருந்து வரும் மரியாசு ஆற்றை இணைத்துக்கொண்டு போர்ட் பெக் ஏரியில் அகலமாகிறது. போர்ட் பெக் அணையை கடந்ததும் வடக்கிலிருந்து மில்க் ஆறு இதனுடன் இணைகிறது.[12][13]

கிழக்கு மாண்டேனாவின் சமவெளியில் பாயும் மிசௌரி வடக்கு டகோட்டாவை அடையும் முன் பாப்புலர் ஆற்றை வடக்கிலிருந்து இணைத்துக்கொள்கிறது. வடக்கு டகோட்டாவை அடைந்ததும் மிசௌரின் முதன்மையான துணையாறான மஞ்சப்பாறை ஆறு தென்மேற்கிலிருந்து இணைகிறது. மிசௌரியுடன் கூடுமிடத்தில் மஞ்சப்பாறை ஆறே மிசௌரியை விட பெரிதாகும்.[n 1] மிசௌரிக்கு அதிக நீரை கொண்டுவரும் துணையாறும் இதுவே. சற்று தொலைவிலுள்ள வில்லிசுடனை கடந்து சககவியா ஏரியை கடந்ததும் காரிசன் அணையையை உருவாக்குகிறது. அவ்வணைக்கு கீழ் நைவ் ஆறு மேற்கிலிருந்து இணைந்து தெற்காக பாய்ந்து பிசுமார்க் நகரை அடைகிறது அங்கு ஆர்ட் ஆறு மிசௌரியுடன் மேற்கிலிருந்து இணைகிறது. வடக்கு தெற்கு டகோட்டா என இரு மாநிலங்களில் பரவியுள்ள ஓகே ஏரியில் மிசௌரி தேக்கமடைந்து ஓடிய சிறிது தொலைவில் கனான்பால் ஆறு அதனுடன் கூடுகிறது. தெற்காக ஒடும் இது பின் ஓகே அணையை தெற்கு டகோட்டாவில் அடைகிறது. தெற்கு டகோட்டாவில் கிராண்ட், மௌரிய, செயன்னே ஆறுகள் மேற்கிலிருந்து இதனுடன் இணைகின்றன.[12][13]

மிசௌரி தென்கிழக்காக பெரும் சமவெளியில் பாய்ந்து வரும்போது நியோபரா ஆறும் பல சிறிய துணையாறுகளும் இதனுடன் இணைகின்றன.இது பின் தெற்கு டகோட்டாவுக்கும் நெப்ராசுக்கா மாநிலத்திற்கும் எல்லையாக அமைகிறது. அதன் பின் இதனுடன் இச்சேம்சு ஆறு வடக்கிலிருந்து கூடியதும் அயோவாவுக்கும் நெப்ராசுக்காவுக்கும் எல்லையாக இவ்வாறு அமைகிறது. சியோக்சு நகரை கடந்ததும் பெரும் சியோக்சு ஆறு வடக்கிலிருந்து கலக்கிறது. நெப்ராசுக்காவிலுள்ள ஒமாகா நகரை கடந்ததும் மிசௌரியின் பெரிய (நீளமான) துணையாரான பிளாட்டே ஆறு அதனுடன் மேற்கிலிருந்து இணைகிறது.[16] கீழ்புறத்தில் நெப்ராசுக்காவும் மிசௌரிக்கும் எல்லையான பின் கேன்சசுக்கும் மிசௌரிக்கும் நடுவே பாய்கிறது. மிசௌரியிலுள்ள கேன்சசு நகரத்துக்கு கிழக்கே கேன்சசு ஆறு இதனுடன் மேற்கிலிருந்து கலக்கிறது. அங்கிருந்து கிழக்காக பயணிக்கும் இவ்வாற்றுடன் வடக்கிலிருந்து கிராண்ட் ஆறு கலக்கிறது. இது செப்பர்சன் நகரத்தை அடைந்தவுடன் தென் பகுதியிலிருந்து ஓசேச் ஆறு கூடுகிறது, சற்று தொலைவில் காசுகோனேட் ஆறும் தெற்கிலிருந்து கூடுகிறது. பின் செயிண்ட் லூயிசு நகரக்கருகே மிசிசிப்பி ஆற்றுடன் மிசௌரி இல்லினாய் எல்லையில் இணைகிறது. [12][13]

. . . மிசௌரி ஆறு . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . மிசௌரி ஆறு . . .

Previous post மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்
Next post போதக்காடு