சவர்க்காரம்

வழலை (Soap, சோப்பு) என்பது அழுக்கைக் கழுவுவதற்கு நீருடன் சேர்த்து உபயோகமாகும் பொருளாகும். பொதுவாகக் கட்டிகளாகக் கிடைக்கிறது. தடித்த திரவ வழலைகளும் உள்ளன. கி.மு. 2800 ஆம் ஆண்டளவில் இருந்து வழலை பயன்படுவதாகத் தெரிகிறது.

இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.
வழலைக் கட்டியொன்று

. . . சவர்க்காரம் . . .

வழலை கிமு 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனியர்களும், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் நடுத்தர வயதினர் இதனைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும், 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு இடலை எண்ணெயை மூலப் பொருளாகக் கொண்ட வழலைகள் விற்பனைக்கு வந்த பிறகு அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆங்கில ஆதிக்கத்தின் கீழிருந்த அமெரிக்க மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழலைகளைச் செய்து பயன்படுத்தி கொண்டனர். ஆங்கில ஆதிக்கம் முடிவுக்கு வந்த போது சிறு முதலீடுகளில் செய்து கொண்டிருந்தவர்கள் அதை தொழிற்சாலையாக மாற்றி உற்பத்தியை பெருக்கினர். இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக துணி துவைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திய பணக்காரர்கள் கூட இந்த வழலைகளை வாங்க நேரிட்டது. இந்த காலகட்டத்தில் இதன் விற்பனை அதிகரித்தது.

. . . சவர்க்காரம் . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . சவர்க்காரம் . . .

Previous post இந்திய முட்டைதின்னிப் பாம்பு
Next post குவைத்தில் பெண்கள்