
கோர் விரப்
கோர் விரப் (Khor Virap; ஆர்மீனியம்: Խոր Վիրապ, “ஆழமான குழி” அல்லது “ஆழமான கிணறு” எனப் பொருள்) என்பது துருக்கி எல்லைக்கு அருகில், ஆராத் மாகாணத்தின் அட்டசாத்தின் தெற்கில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தூரத்தில் ஆர்மீனியாவிலுள்ள ஆராத் சமவெளியில் அமைந்துள்ள ஓர் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை துறவியர் மடம் ஆகும்.[1][2] இந்த துறவியர் மடம் இறையியல் குருமடமாகவும் ஆர்மீனிய கத்தோலிக்கசுகளின் வசிப்பிடமாகவும் இருந்தது.[3]
முன்பு கிரிகர் லுசாவோரிச் எனப்பட்டவர் பின்னர் புனித கிரகரி என்ற பெயர் பெற்றவருடைய இடம், துறவியர் மடம் என்பவற்றால் கோர் விரப் குறிப்பிடத்தக்கமை பெற்றுள்ளது. இவர் முதலில் அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் 14 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார். பின்னர் புனித கிரகரி அரசரின் சமய ஆலோசகராக இருந்து, அவர்கள் சமயம் மாறுபவர்களுக்கான நடவடிக்கையை நாட்டில் மேற்கொண்டனர். 301 ஆம் ஆண்டில், கிறித்தவ நாடு என்று அறிவித்த உலகில் முதல் நாடாக ஆர்மீனிய இருந்தது.[1][4][5]
ஆரம்பத்தில் சிறிய கோயில் ஒன்று புனித கிரகரியின் திருநிலைப்படுத்தலைக் குறிக்கும் விதமாக கி.பி 642 இல் கட்டப்பட்டது. பல நூற்றாண்டுகளான இது பலதடவைகள் மீள்கட்டுமானத்திற்குள்ளானது. 1662 இல், பழைய சிறு கோயில் இடுபாட்டுப் பகுதியில் பெரியளவில் “கடவுளின் பரித்தத் தாய்” எனும் பெயரில் கட்டப்பட்டது. தற்போது வழமையான தேவாலய வழிபாடுகள் இதில் நடைபெறுகிறது. ஆர்மீனியாவில் இது ஒரு மிகவும் பார்வையிடப்படும் இடமாகவுள்ளது.[5]
. . . கோர் விரப் . . .
கோர் விரப் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தூரத்தில் போகர் வேடியிலுள்ள சிறுகுன்றின் மேல் அமைந்துள்ளது. தலைநகரும் ஆர்மீயாவில் பெரிய நகருமான யெரெவான் வடக்கில் 30 கிலோமீட்டர்கள் (19 mi) தூரத்தில் உள்ளது. இது துருக்கிய – ஆர்மீனிய எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் (330 ft) தூரத்தில் உள்ளது. முள்ளுக் கம்பி வேலியினால் அமைந்த அச்சிக்கல் நிறைந்த எல்லைப் பிரதேசத்தில் இராணுவ நிலைகள் உள்ளன.[4][6][7]
துறவியர் மடம் பச்சை புல்வெளி நிலங்களாலும் திராட்சைத் தோட்டங்களாலும் அரராத் சமவெளியில் சூழப்பட்டுள்ளதோடு அரராத் மலையின் காட்சியும் உள்ளது. ஆராஸ் ஏரி துருக்கியின் ஆராலிக்கிற்கு எதிர்ப்பக்கத்தில் துறவியர் மடத்திற்கு அண்மையில் ஒடுகிறது.[8]
. . . கோர் விரப் . . .