
குவைத்தில் பெண்கள்
குவைத்தில் பெண்கள் (Women in Kuwait)மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் விடுவிக்கப்பட்ட பெண்களாக குவைத்பெண்கள் உள்ளனர். 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் அரபு நாடுகளில் குவைத் முதலிடத்தைப் பிடித்தது. [3][4][5] 2013ஆம் ஆண்டில், குவைத் பெண்கள் 53% தொழிலாளர்களாக இருந்தனர். [6] குவைத் பெண்கள் பணியாளர்களில் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். [7]
எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து குவைத்தில் பெண்கள் பல மாற்றங்களை சந்தித்துள்ளனர். 1960களில் தொடங்கி இன்றும் தொடரும் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டின் நீண்ட வரலாறு அவர்களிடம் உள்ளது. 1950களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அவர்களின் அணுகல் வியத்தகு அளவில் அதிகரித்தது.
. . . குவைத்தில் பெண்கள் . . .
17ஆம் நூற்றாண்டு முதல் 1950களில் எண்ணெய் கண்டுபிடிக்கும் வரை குவைத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் கடல் வர்த்தகத்தை சார்ந்திருந்தது. ஆண்கள் கடற்பரப்பில் இருந்தபோது, குவைத்தின் பெண்கள் தங்கள் வீடுகளை நிர்வகித்தனர். மேலும் குடும்ப விவகாரங்களையும் நிதிகளையும் கட்டுப்படுத்தினர். தங்களால் செலவலிக்கக்கூடிய பணத்தை கொண்ட குடும்பங்களில், பெண்கள் அதிக நேரம் செலவளிக்க முற்றத்தைக் கொண்ட வீடுகள் மற்றும் அரண்மனைகள் கட்டப்பட்டன. இந்த அமைப்பு, தெருவை விட வீட்டிற்குள் எதிர்கொள்ளும் உயர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுடன், பெண்களை பொது பார்வையில் இருந்து நீக்கியது. நகர்ப்புற, உயர் வர்க்க பெண்கள் பொதுவெளியில் பங்கேற்பது குறைவாகவே இருந்தது. [8] இருப்பினும், குறைந்த அதிர்ஷ்ட சூழ்நிலைகளைச் சேர்ந்த பெண்களுக்கு மிகக் குறைந்த அனுபவம் இருந்தது; அவர்கள் தினசரி கடைவீதிகளுக்குச் சென்று, குடிநீரைப் பெற்றுக் கொண்டு, நதிக்கரையில் தங்கள் குடும்பத்தினரின் துணிகளைக் சுத்தம் செய்ந்தார்கள். [9] குவைத் பெண்கள் 1916ஆம் ஆண்டில் முதல் குர்ஆன் பள்ளி நிறுவப்பட்டபோது வேதத்தைக் கற்கத் தொடங்கினர். இதற்குப் பிறகு பல பெண்கள் மத பயிற்றுநர்களாக பணியாற்றத் தொடங்கினர். முதல் தனியார் பள்ளி 1926இல் திறக்கப்பட்டது; இது வாசிப்பு, எழுதுதல் மற்றும் சித்திரத்தையல்ஆகியவற்றைக் கற்பித்தது. 1937ஆம் ஆண்டில் பொதுப் பள்ளிப்படிப்பு தொடங்கியது. ஆனால் அதில் சில காலம் சேர்க்கை குறைவாக இருந்தது; இருப்பினும், 1940களில் பல இளம் குவைத் பெண்கள் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த கல்வி முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளுக்காக பெரும்பாலும் பெண்களே முன்வந்தனர், 1956 ஆம் ஆண்டில் ஒரு இளம் பெண்கள் தங்கள் உடையான அபாயாக்களை எரித்தனர்.
. . . குவைத்தில் பெண்கள் . . .