கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்)

கி. கஸ்தூரிரங்கன் என்னும் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan) (பிறப்பு 24 அக்டோபர்.1940) , ஒரு விண்வெளி அறிவியலாளர். இவர் 1993 முதல் 2003 வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்தார்.[1] அவர் தற்போது ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார்.[2]. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தராக இருந்துள்ளார்[3]. மேலும் கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார்[4]. அவர் மாநிலங்களவையின் (2003-09) முன்னாள் உறுப்பினராகவும், தற்போது செயல்படாத திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். அவர் மாநிலங்களவையின் (2003-09) முன்னாள் உறுப்பினராகவும், தற்போது செயல்படாத திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2004 ஏப்ரல் முதல் 2009 வரை பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் இயக்குநராகவும் இருந்தார். அவர் இந்திய அரசால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய மூன்று முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்: பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷன் (1992) மற்றும் பத்ம விபூஷன் (2000).[5]

முனைவர் . கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்

முனைவர் . கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்
பிறப்பு 24 அக்டோபர் 1940 (1940-10-24) (அகவை 81)
எர்ணாகுளம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியர்
துறை வானியல்/ விண்வெளி அறிவியல், தொழினுட்பம்
பணியிடங்கள் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம்; இந்திய விண்வெளி ஆய்வு மையம்
கல்வி கற்ற இடங்கள் இளங்கலை அறிவியல் (கௌரவ பட்டம்),ராம்நரைன் ரூயா கல்லூரி, மாதுங்கா (மும்பை),மும்பை பல்கலைக்கழத்தில் இருந்து முதுநிலை பட்டம் மற்றம், 1971ல் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், குஜராத் பல்கலைக்கழகத்திலிருந்துவானியல் மற்றம் வானியற்பியலில் முனைவர் பட்டம்.
அறியப்படுவது இந்திய விண்வெளித்துறையின் தலைவர் , மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தொடர்பான அறிக்கை ல
விருதுகள் பத்மஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண்

. . . கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்) . . .

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்ததுள்ளார், அங்குள்ள ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், பெசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, 1971 இல், உயர் ஆற்றல் வானியலில் தனது டாக்டர் பட்டம் பெற்றார். வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் 244 க்கும் மேற்பட்ட ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். இந்திய விண்வெளித்துறையின் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

டாக்டர் கஸ்தூரிரங்கன் 16 பல்கலைக் கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

 • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
 • ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது
 • எம்.பி. பிர்லா நினைவு விருது.
 • பத்மஸ்ரீ விருது.
 • பத்மபூஷன் விருது.[7]
 1. Dr. Krishnaswamy Kasturirangan (1994-2003)“. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (2016).
 2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். “”.
 3. Archived copy“. மூல முகவரியிலிருந்து 7 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-05-02.
 4. Planning Commission Organisation“. Shivap. மூல முகவரியிலிருந்து 4 March 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-03.
 5. Padma Awards“. உள்துறை அமைச்சகம் (இந்தியா) (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 21, 2015.
 6. Dr. Krishnaswamy Kasturirangan (1994-2003) – ISRO (en).
 7. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்14

. . . கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்) . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்) . . .

Previous post இருகந்தகப் பதின்புளோரைடு
Next post காடை