
காடை
காடை (ஆங்கிலம்: quail) என்பது ஃபசியானிடே (தொகையுடைப் பறவைகள்) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப்பெரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். புது உலகக் காடைகள் (ஓடோண்டோஃபோரிடே குடும்பம்) மற்றும் பட்டன் காடைகள் (டுர்னிசிடே குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன, எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.
. . . காடை . . .
கீழ்க்காணும் ஃபசியானிடே குடும்பத்திலுள்ள பறவைகள் காடைகள் என வழங்கப்படுகின்றன.
- கோடுர்நிக்ஸ் (Coturnix) பேரினம்
- நாட்டுக் காடை, Coturnix coturnix
- ஜப்பானியக் காடை, Coturnix japonica
- சுள்ளிக்கட்டைக் காடை, Coturnix pectoralis
- நியூசிலாந்துக் காடை, Coturnix novaezelandiae (அழிந்துவிட்டது)
- மழைக் காடை, Coturnix coromandelica
- ஹார்லக்வின் காடை, Coturnix delegorguei
- பிரவுன் காடை, Coturnix ypsilophora
- நீலக் காடை, Coturnix adansonii
- ஆசிய நீலக் காடை, Coturnix chinensis
- அனுரோஃபசிஸ் (Anurophasis) பேரினம்
- பனிமலைக் காடை, Anurophasis monorthonyx
- பெர்டிகுலா (Perdicula) பேரினம்
- ஜங்கிள் புஷ் காடை, Perdicula asiatica
- ராக் புஷ் காடை, Perdicula argoondah
- பெயிண்டட் புஷ் காடை, Perdicula erythrorhyncha
- மணிப்பூர் புஷ் காடை, Perdicula manipurensis
- ஒஃப்ரீசியா (Ophrysia) பேரினம்
- இமாலயக் காடை, Ophrysia superciliosa (மிக்க அருகிய இனம்)
காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழ் பறவைகளாகும். இவை விதைகளை உண்கின்றன, எனினும் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் போன்ற சிறிய விலங்குகளையும் உண்கின்றன. இவை நிலத்தில் கூடுகள் அமைக்கின்றன; இவை வேகமாகக் குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியான.[1][2] சில வகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் (Coturnix quail) பெருமளவில் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன.
- சமையலில் காடைகள்
- காடை வளர்ப்பு
. . . காடை . . .