இருகந்தகப் பதின்புளோரைடு

இருகந்தகப் பதின்புளோரைடு(Disulfur decafluoride) என்பது 1934 ஆம் ஆண்டில் டென்பிக் மற்றும் வொயிட்லா-கிரே என்பவர்களால் கண்டறியப்பட்ட ஒரு வாயு ஆகும்[4]. இவ்வாயுவின் மூலக்கூற்று வாய்ப்பாடு S2F10 ஆகும். கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு கந்தகமும் ஒரு எண்முக வடிவம் கொண்டு ஐந்து புளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளன[5]. இருகந்தகப் பதின்புளோரைடு பாசுகீன் வாயுவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான நச்சுத்தன்மை கொண்டதாகும். இரண்டாம் உலகப் போரின்போது, இரசாயன போர் முறையில் நுரையீரலைத் தாக்கும் முகவராகக் கருதப்பட்டது. ஏனெனில் கண்ணீர் வழிதல், தோல் எரிச்சல் உண்டாக்குதல் போன்ற எச்சரிக்கை வழங்கும் செயல்கள் எதையும் வெளிப்படுத்தாமல் இவ்வாயு நேரடியாக நுரையீரலைத் தாக்குகிறது.

இருகந்தகப் பதின்புளோரைடு
Ball-and-stick model of disulfur decafluoride
Space-filling model of disulfur decafluoride
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்

டைசல்பர் டெகாபுளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்

டெக்காபுளோரோ-1λ6,2λ6-டைசல்பேன்
வேறு பெயர்கள்

கந்தக ஐம்புளோரைடு
இனங்காட்டிகள்
5714-22-7
ChemSpider 56348?
EC number 227-204-4
InChI

InChI=1S/F10S2/c1-11(2,3,4,5)12(6,7,8,9)10
Key: BPFZRKQDXVZTFD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த Disulfur+decafluoride
பப்கெம் 62586
SMILES
FS(F)(F)(F)(F)S(F)(F)(F)(F)F
பண்புகள்
S2F10
வாய்ப்பாட்டு எடை 254.1 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் கந்தக டை ஆக்சைடு நெடி[1]
அடர்த்தி 2.08 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 30.1 °C (86.2 °F; 303.2 K)
கரையாது[2]
ஆவியமுக்கம் 561 மி.மி.பாதரசம் (20 °செல்சியசு)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சுத்தன்மை
Lethal dose or concentration (LD, LC):
LC50 (Median concentration)
2000 மி.கி/மீ3 (எலி, 10 நிமிடங்கள்)
1000 மி.கி/மீ3 (சுண்டெலி, 10 நிமிடங்கள்)
4000 மி.கி/மீ3 (முயல், 10 நிமிடங்கள்)
4000 மி.கி/மீ3 (கினியா பன்றி, 10 நிமிடங்கள்)
4000 மி.கி/மீ3 (நாய், 10 நிமிடங்கள்)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.025 மில்லியனுக்கு (0.25 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
C 0.01 மி.கி/பகுதி (0.1 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
1 மில்லியனுக்கு[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

உயர் மின்னழுத்தத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மந்த மின்காப்பான்கள், செலுத்துக்கம்பிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் மின்பிரியிணைப்பி போன்றவற்றில் அத்தியாவசியமாகப் பயன்படும் கந்தக அறுபுளோரைடை மின் சிதைவுக்கு உட்படுத்தி இருகந்தகப் பதின்புளோரைடு தயாரிக்கப்படுகிறது. கந்தக அறுபுளோரைடைத் தயாரிக்கும் போதும் இருகந்தகப் பதின்புளோரைடு உருவாகிறது, ஆனால் காய்ச்சி வடித்தல் முறையில் இவ்வாயு நீக்கப்பட்டு விடுகிறது.

. . . இருகந்தகப் பதின்புளோரைடு . . .

கந்தக அறுபுளோரைடை சிதைவுக்கு உட்படுத்தி இருகந்தகப் பதின்புளோரைடு தயாரிப்பது முதன்மையான தயாரிப்பு முறையாகும். 2 SF6 → S2F10 + F2

இவ்வாயுவில் கந்தகம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. 150 பாகைசெல்சியசுவெப்பநிலையில் இருகந்தகப் பதின்புளோரைடானது SF6 மற்றும் SF4 என்ற இரண்டு சேர்மங்களாக மெதுவாகச் சிதைவடைகிறது.

S2F10 → SF6 + SF4

N2F4 உடன் S2F10 வினைபுரிந்து SF5NF2 சேர்மத்தைக் கொடுக்கிறது. புறஊதா கதிர்வீச்சு முன்னிலையில் S2F10கந்தக டை ஆக்சைடுடன் வினைபுரிந்து SF5OSO2F உருவாகிறது. அதிக அளவு குளோரின் வாயுவுடன் வினைபுரிந்து கந்தக குளோரைடு ஐம்புளோரைடைத் தருகிறது.

S2F10 + Cl2 → 2 SF5Cl

மேற்கண்ட வினையை ஒத்த புரோமின் வினையில் மாறாக SF5Br உருவாகிறது.[6] இவ்வெதிர் வினை இருகந்தகப் பதின்புளோரைடை SF5Br இல் இருந்து தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன்படுகிறது[7].

அமோனியா இருகந்தகப் பதின்புளோரைடால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு [[தையசைல் முப்புளோரைடு NSF3 உருவாகிறது.[8]

. . . இருகந்தகப் பதின்புளோரைடு . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . இருகந்தகப் பதின்புளோரைடு . . .

Previous post இலாந்தனைடு குறுக்கம்
Next post கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்)