இந்திய முட்டைதின்னிப் பாம்பு

இந்திய முட்டைதின்னிப் பாம்பு என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் அரிய பாம்பு ஆகும்.

இந்திய முட்டைதின்னிப் பாம்பு
Indian egg-eater at Amravati
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வரிசை: பாம்பு
துணைவரிசை: Serpentes
குடும்பம்: Colubridae
துணைக்குடும்பம்: Colubrinae
இருசொற் பெயரீடு
Elachistodon westermanni

. . . இந்திய முட்டைதின்னிப் பாம்பு . . .

இந்திய முட்டைதின்னிப் பாம்பு வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் அண்மையில் இந்த இனப்பாம்பு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.[1][2] இந்த இனப்பாம்புகள் 1969 இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டுவந்த நிலையில் செம்பட்டியலில் இடம்பெற்றது. இருப்பினும், 2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வார்தா என்னுமிடத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வகை பாம்புகள் நிறம் பொதுவாக கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.மஞ்சள் கோடுகள் தலையின் மேற்பகுதியில் இருந்து கழுத்துவரையிலும், கண்களின் மேற்பகுதிவரையிலும் நீண்டிருக்கும். வளர்ந்த பா்ம்புகளின் வால்11 செமீ (4¼ அங்குளம்) நீளமும் மொத்த நீளம் 78 செமீ (31 அங்குளம்) கொண்டவை [3]

இந்த பாம்புகளின் முதன்மை உணவு பறவைகளின்முட்டைகளும், ஊர்வனவுமே ஆகும். இதன் வாயமைப்பு முட்டைகளை உண்பதற்கேற்றவாறு அமைந்துள்ளது. இதன் தொண்டை விரிவடையக்கூடிய வகையில் இருப்பதால் தனது உடல் அளவைவிட மூன்று நான்கு அளவு பெரியதான முட்டைகளை விழுங்கிவிடும். கழுத்துப் பகுதில் உள்ள எலும்புகள் சற்றே நீளமாகி உணவுக்குழாய்க்குள் சென்றுவிடுகின்றன, இதனால் விழுங்கப்பட்ட முட்டைகள் உணவுக் குழாய்க்குள் உள்ள முள்போன்ற எலும்புகளால் உடைக்கப் படுகிறது.[4]

  1. Captain, A. & F. Tillack & A. Gumprecht & P. Dandge (2005). “First Record of Elachistodon westermanni Reinhardt 1863 (Serpentes, Colubridae, Colubrinae) from Maharashtra State, India.”. Russian Journal of Herpetology 12 (2): 156–158.
  2. Nande R and Sawan Deshmukh (2007). “Snakes of Amravati district including Melghat, Maharashtra, with important records of the Indian egg-eater, montane trinket snake and Indian Smooth Snake”. Zoos’ Print Journal 22 (12): 2920–2924. doi:10.11609/jott.zpj.1653.2920-4. http://www.zoosprint.org/ZooPrintJournal/2007/December/2920-2924.pdf.
  3. Boulenger, G.A. 1896. Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume III. London.
  4. Gans, Carl, Oshima, Masamitsu, 1952. Adaptations for egg eating in the snake Elaphe climacophora (Boie). American Museum novitates ; no. 1571

. . . இந்திய முட்டைதின்னிப் பாம்பு . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . இந்திய முட்டைதின்னிப் பாம்பு . . .

Previous post Specklinia dunstervillei
Next post சவர்க்காரம்